காமன்வெல்த் 2022: விளையாட்டு திருவிழா; இந்தியா இன்று...

பர்மிங்காம் காமன்வெத் விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று தடகளம், மகளிர் ஹாக்கி, ஆண்கள் டேபிள் டென்னிஸ் மற்றும் பளுதூக்குதலில் களமிறங்குகிறது. தடகள போட்டிகள் பிற்பகல் 2.30க்கு தொடங்குகின்றன.

* ஆண்கள் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சேபிள் பங்கேற்கிறார்.

* ஆண்கள் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் முரளி ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் களமிறங்குகின்றனர்.

* மகளிர் 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டப் பந்தயம்: ஜோதி யார்ராஜி

* மகளிர் குண்டு எறிதல் மன்பிரீத் கவுர்

* மகளிர் வட்டு எறிதல்

* நவ்ஜீத் கவுர் தில்லான்

* மகளிர் ஹாக்கியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன (தொடக்கம்: மாலை 6.30)

* ஆண்கள் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டி பிறகல் 3.30க்கு தொடங்குகிறது.

* மாலை 6.30க்கு தொடங்கும் பளுதூக்குதல் போட்டிகளில் உஷா குமாரா (மகளிர் 87 கி.), பூர்ணிமா பாண்டே (மகளிர் 87+ கி.), விகாஸ் தாகூர் (ஆண்கள் 96 கி.), ரகளா வெங்கட் ராகுல் (ஆண்கள் 96+ கி.) பதக்க வேட்டை நடத்துகின்றனர்.

Related Stories: