போலந்து ஓபன் கார்சியா சாம்பியன்

வார்சா: போலந்து ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ருமேனியா வீராங்கனை அனா போக்தனுடன் (29 வயது, 75வது ரேங்க்) மோதிய கார்சியா (28 வயது, 32வது ரேங்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கார்சியா வென்ற 9வது டபுள்யு.டி.ஏ பட்டம் இது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் உலக அளவில் 4வது ரேங்க்கில் இருந்து கடந்த மே மாதம் 79வது இடத்துக்கு பின்தங்கினார். பின்னர் களமிறங்கி விளையாடிய 21 போட்டிகளில் கார்சியா 18 வெற்றிகளைக் குவித்துள்ளதும், போலந்து ஓபன் காலிறுதியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: