×

குரோஷியா ஓபன் சின்னர் அசத்தல்

ஜாக்ரெப்: குரோஷியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலி நட்சத்திரம் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.பைனலில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராசுடன் (19 வயது, 4வது ரேங்க்) மோதிய சின்னர் (20 வயது, 10வது ரேங்க்) 6-7 (5-7) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினாலும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி 6-1, 6-1 என வென்று பிரமாண்ட கோப்பையை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 26 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் சின்னர் வென்ற முதல் ஏடிபி பட்டம் இது.

Tags : Croatia , Croatia Open Sinner is awesome
× RELATED குரோஷியாவின் ரீமாக் நிறுவனத்தின்...