கோவை, சேப்பாக் கூட்டாக சாம்பியன்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடரின் 6வது சீசன் பைனலில் சேப்பாக் கில்லீஸ் 5வது முறையாகவும், கோவை கிங்ஸ் முதல் முறையாகவும் நேற்று முன்தினம் இரவு மோத இருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கூட்டாக சாம்பியன்  பட்டத்தை பகிர்ந்து கொண்டன. சேப்பாக் தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. அந்த அணி 6 தொடரில் பெறும் 4வது கோப்பை இது. கோவை அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி கோப்பையையும் வசப்படுத்தி உள்ளது.

Related Stories: