பணிக்கு வராமல் பதிவேட்டில் கையெழுத்து அரசு மருத்துவர் சஸ்பெண்ட்: அமைச்சர் அதிரடி

கோவை: கோவை அரசு மருத்துவமனை இதயவியல் துறைத் தலைவர் முனுசாமி மருத்துவமனைக்கு வராமல் வருகை பதிவேட்டில் பணிக்கு வந்ததாக குறிப்பிட்டு வந்துள்ளார். புகாரின் அடிப்படையில் மருத்துவமனையின் டீன் நிர்மலா அவரை எச்சரித்துள்ளார். எனினும் பணிக்கு வராமல் வந்ததாக வருகை பதிவேட்டில் முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மருத்துவர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், அனைத்து அரசு மருத்துவமனையின் முதல்வர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறைச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் இதயவியல் துறைத் தலைவர் மீதான புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து முனுசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories: