மதுரையில் இம்மாத இறுதியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் தகவல்

மதுரை: மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை, மூன்றுமாவடியில் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை சார்பில் ரூ.3.20 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதியை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து திறந்து வைத்தார். மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடூர ஊழல் நடந்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் மதுரையில் தேங்கிய மழை நீர். மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர், சுதந்திர தின விழா போன்ற காரணங்களால் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: