×

மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: தமிழக அரசு கடிதம்

சென்னை: கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்தாளுமையை போற்றும்விதமாக அவர் பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை 134 அடி உயரத்திற்கு பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஒப்புதல் அளித்த நிலையில்  பேனா நினைவு சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.  
 
இத்திட்டத்திற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி ஒன்றிய சுற்றுசூழல்துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து நேரடியாக கடலுக்குள் கண்ணடிப்பாலம் வழியாக நடந்து செல்லும் வகையிலான திட்டத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை மேற்கொள்ளவதற்கான ஒப்புதலை வழங்குமாறு இந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Artist Pen Memorial at Marina Beach: Tamil Nadu Govt
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...