மக்களவையில் 4 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து: ஓம் பிர்லா எச்சரிக்கை

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் மாணிக்கம்தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்து, அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தொடங்கியது. பெட்ரோல், டீசல் உட்பட விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துவருக்கும் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. அதன்  ஒருபகுதியாக மக்களவைக்குள் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இன்று மீண்டும் மக்களவை கூடியபோது விலைவாசி உயர்வு மீதான விவாதத்திற்கு அவைத்தலைவர் அனுமதியளித்தும் 4 எம்.பி.க்களின் இடைநீக்கத்தினை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் அவை கூடியதும் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். விதிகளை மீறி இனி அவைக்குள் பதாகைகளை கொண்டுவரக் கூடாதெனவும் அவர் எச்சரித்தார். அதைத்தொடர்ந்து 4 பேரும் அவைக்குள் வந்தனர்.   

Related Stories: