×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: இந்து மக்கள் கட்சி தகவல்

சீர்காழி: தமிழகத்தில் இந்தாண்டு 1 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொண்டாட ஏற்பாடு நடந்து வருகின்றன. “வீதி தோறும் விநாயகர் வீடு தோறும் விநாயகர்” என்ற இலக்குடன் தமிழகத்தில் இந்தாண்டு 1 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது.

ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வால் சிலை தயாரிப்பு பணிகள் தொய்வடைந்துள்ளது. விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு வங்கிகள் மூலம் குறுகிய கால கடன் வழங்குவதோடு, தமிழக அரசும் நிதியுதவி செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி பெருவிழா ஊர்வலங்கள் சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vinayagar ,Chaturthi ,Hindu People's Party , 1 Lakh Ganesha Idols Consecrated on Vinayagar Chaturthi: Hindu People's Party Information
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்