தேசிய திரைப்பட விருதுகள் தேர்வு; கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது: சினிமா இயக்குனர் பரபரப்பு பேச்சு

கோழிக்கோடு: தேசிய திரைப்பட விருதுகள் தேர்வு என்பது கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது என்று கேரள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘தேசிய திரைப்பட விருதுக்கான நடுவர் குழுவில் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. நடுவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லை.

சாதாரண படங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட விருதுகள் தேர்வு என்பது ஒரு கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது.  மேலும், விருதுகளுக்கு படங்களை தேர்வு செய்வதற்கான அளவுகோல் புரியவில்லை. இந்த நடைமுறை மிகவும் நியாயமற்றது. கேரளாவை அனைத்து முனைகளிலிருந்தும் பின்னுக்குத் தள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: