ஓ.பி.எஸ். தலைமையிலானது தான் உண்மையான அதிமுக!: பெயர் பலகையை எடுத்து வைத்துக்கொண்ட ஜெயக்குமாரின் செயல் கேவலமானது.. கோவை செல்வராஜ் பேட்டி..!!

சென்னை: பன்னீர்செல்வம் தலைமையிலான அணிதான் உண்மையான அதிமுக என்று கோவை செல்வராஜ் தெரிவித்திருக்கிறார். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தான்; இடையில் நடைபெற்ற நிகழ்வுகள் பதிவாகவில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் கொடுத்ததின் பேரில் அனைத்து கட்சிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்டேன். பன்னீர்செல்வம் தலைமையிலான அணிதான் உண்மையான அதிமுக. அதிமுக பெயர் பலகையை ஜெயக்குமார் எடுத்து வைத்துக் கொண்டது கேவலமான செயல். தரமற்ற செயலை ஒருவர் செய்யும்போது தரமானவர்கள் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள். அதிமுக சார்பில் இனி அனைத்து நிகழ்ச்சி, கூட்டங்களிலும் பங்கேற்க போவதாக தெரிவித்தார்.

Related Stories: