×

வாக்காளர் ஐ.டி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தால் கள்ளஓட்டு போடுவது தவிர்க்கப்படும்!: அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: வாக்காளர் ஐ.டி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தால் கள்ளஓட்டு போடுவது தவிர்க்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் கருத்து கேட்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைய அதிமுக வலியுறுத்தியுள்ளது. வாக்காளர் ஐ.டி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தால், கள்ள ஓட்டு போடுவது முற்றாக தவிர்க்கப்படும்.

வாக்காளர் ஐ.டி.யுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் அதிமுகவின் கருத்தை கூறியிருக்கிறோம். இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆதார் இல்லாவிட்டால், வாக்களிக்க அனுமதிக்க கூடிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். ஒருவருக்கு 6 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன, போலி வாக்காளர்கள் இருக்கவே கூடாது என்று தெரிவித்தார்.

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி தரப்பில் அனைத்துகட்சி கூட்டத்தில் நானும், பொள்ளாச்சி ஜெயராமன் மட்டுமே பங்கேற்றோம். அதிமுக சார்பில் நாங்கள் இருவர் மட்டுமே அதிகாரபூர்வமாக கலந்து கொண்டிருக்கிறோம் என்றார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எந்தக் கட்சியின் சார்பில் வந்தார் என்பது எங்களுக்கு தெரியாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,minister ,Jayakumar , Voter ID, Aadhaar Number, Fake Vote, Jayakumar
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...