×

புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: 4-வது மனைவி பரபரப்பு புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவராக 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட கல்யாண மன்னன் மீது காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட 4 மனைவி பெண் குழந்தையுடன் வந்து கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். புகாரில் சிக்கியுள்ள  கல்யாண மன்னன் அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகன். இவர் கடலூர் மாவட்டம் மேலுகுப்பம்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காயத்ரியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இவரகள் திருமணம் நடைபெற்றதால் வரவேற்பு நிகழ்ச்சி வைக்கவில்லை. இந்நிலையில் காயத்ரிக்கு வரதட்சனையாக 6 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனம், பீரோ, கட்டில் வழங்கப்பட்டது. 3 மாதம் குடும்பம் நடத்திய தெய்வநாயகன் மனைவியிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் காயத்ரியை அவரது தாயார் அழைத்து சென்றுவிட்டார். அப்போது 3 மாத கர்ப்பினியாக இருந்த காயத்ரியை கணவன் தெய்வநாயகன் வந்து பார்க்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த காயத்ரி கணவரை குறித்து விசாரித்த போதுதான் அவர் ஏற்கனவே 5 திருமணங்கள்  செய்த கல்யாண மோசடி மன்னன் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. முதல் மனைவி அனிதா, இரண்டாவது மனைவி தேவி, மூன்றாவது மனைவி கனகவள்ளி ஆகியோரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது. முதல் மனைவியான அனிதா என்கிற இந்திரகுமாரி என்பவருக்கும் தனக்கும் திருமணம் ஆகி பிரிவு ஏற்பட்டு விவாகரத்து பெறப்பட்டது என்று கூறி திருமணம் செய்துள்ளார்.

ஆனால் இருவருக்கும் விவாகரத்து ஆக வில்லை. தொடர்ந்து 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து காயத்ரி கேட்ட போது அடியாட்களை வைத்து அடிக்கவும், கொலை செய்யவும் முயன்றதாக தெய்வநாயகன் மீது காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார். கயத்ரி பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவனையில் அனுமதிக்கபட்ட போது 5-வதாக தெய்வநாயகன் திருமணம் செய்துள்ளது தெரியவந்திருக்கிறது.

Tags : Puducherry , 5 women cheated and married in Puducherry: 4th wife complains
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது