×

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

சென்னை: அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான அனைத்துக் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உட்பட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றேற்றுள்ளனர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன், அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் தாமோதரன், நவாஸ், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆறுமுக நயினார், ராஜசேகர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியசாமி, ஏழுமலை, தேசியவாத காங்கிரஸ் சார்பில் நரேஷ்குமார் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அடைக்கலராஜ் பங்கேற்றனர்.

தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, ஜனார்த்தனன், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதில் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சாகு, ஆதார் இல்லாவிடில் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணத்தை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கலாம் என்றார். பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான்கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர் பட்டியலுடன் சேர்க்கலாம். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்னை பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். பிரச்னை குறித்து ஆணையமே முடிவு செய்யும் என தெரிவித்தார்.


Tags : Election Commission ,Aadhaar , Voter Card, Aadhaar Number, All Party, Election Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...