மேற்கு வங்கத்தில் கன்வர் யாத்திரை சென்ற போது சோகம்.. மின்சாரம் தாக்கி பக்தர்கள் 10 பேர் பலி.. 16 பேருக்கு தீவிர சிகிச்சை!!

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் கன்வர் யாத்திரை சென்ற பக்தர்கள் 10 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதல்குச்சி என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் வேன் ஒன்றில் கன்வர் யாத்திரை சென்றனர். அவர்களது வாகனம் கூச் பெஹர் என்ற இடத்தை கடந்துச் சென்ற போது, திடீரென வேனில் மின்சாரம் தாக்கி அனைவரும் மயக்கம் அடைந்தனர். வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர், வாகனத்தின் பின்புறம் இருந்த ஜெனரேட்டரில் மின் கசிவு ஏற்பட்டதால் அதனை நிறுத்தி உள்ளார். பின்னர் பக்தர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் ஜல்பைகுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். எஞ்சிய 16 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் கிடைத்த சிதல்குச்சி சோகத்தில் மூழ்கினர். பல வீடுகளில் குடும்ப தலைவர்களை இறந்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வட இந்திய மாநிலங்களில் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான 30 நாட்கள் கன்வர் யாத்திரை செல்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு புனித கங்கை நீரை சேமித்து அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்தார்கள். 

Related Stories: