×

சற்று குறைவுடன் விற்பனையாகும் தங்கம்... சவரன் ரூ.160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.4,795-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.40 காசுகள் குறைந்து, ரூ.63.30-க்கும், ஒரு கிலோ 63,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் தேதியில், ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்ந்ததை தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்த 27, 28-ம் தேதிகளில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.256, ரூ. 304 என உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,800-க்கு அதிகமாகவும், ஒரு கிராம் ரூ.4,800-க்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்கவே அச்சப்படும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் சென்றனர். அதன் பின் சற்றும் குறைவை காணாத தங்க விலையானது நாளுக்குநாள் உயர்வை மட்டும் சந்தித்து வரும் நிலையில், இன்று சற்று இரக்கம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, தங்கத்தின் விலை வழக்கம் போல் சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகளை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சிறிது குறைந்திருப்பது மக்களை சற்று மகிழ்ச்சியில் வைத்துள்ளது.   


Tags : Sawan , Chennai, jewelery gold, shaving, low
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...