×

நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லை: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டம்..!

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் அனுமதிக்க மாட்டோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சீனாவுக்கு சொந்தமான உளவு கப்பல் அடுத்த மாதம் 11ம் தேதி அன்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வார காலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி; இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த விளைவையும் உன்னிப்பாக கண்காணிப்போம் என்றார்.

இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திருப்பு செலுத்த முடியாததால் அந்த துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. அங்கு தான் இலங்கை உளவுக் கப்பல் நிலைநிறுத்தப்படுகிறது. சீனாவின் ஜன்க் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 13ம் தேதி புறப்பட்ட ‘யுவான் வாங்க்-5’ கப்பல் தைவானை கடந்து இந்திய பெருங்கடலில் இலங்கை நோக்கி பயணித்து வருகிறது.


Tags : There is no compromise on the country's security: India's Ministry of External Affairs plans..!
× RELATED பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான...