×

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மீட்ட இலங்கை கடற்படை: மனிதாபிமான செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

ராமேஸ்வரம்: நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி செய்து படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து பத்திரமாக ராமேஸ்வரம் திருப்பி அனுப்பினர். கடந்த சனிக்கிழமை (30) ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மீன்பிடிவிசைப் படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, பாண்டி உள்ளிட்ட 6 நபர்கள் மீன்பிடிக்க சென்ற படகு தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்றது.

அப்போது தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை தலைமன்னார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ் ரணஜெயா என்ற ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீட்டனர். முதற்கட்டமாக 6 மீனவர்களுக்கும் உணவளித்த இலங்கை கடற்படையினர் பழுதான விசைப்படகின் இன்ஜினையும் பழுதுபார்க்க முயற்சி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பழுதாகி நின்ற ராமேசுவரத்தை சேர்ந்த படகு மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் கயிறு கட்டி இழுத்து வந்து தேடிச் சென்ற ராமேசுவரம் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

கடற்படையின் இந்த மனிதாபிமான செயல் தமிழக மீனவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை கடற்படை எல்லைகளை பாதுகாப்பதுடன் மனிதநேய உதவிகளை செய்வதிலும் முன் நிற்கும் என தெரிவித்துள்ளது.

Tags : Rameswaram Fishermen ,Sri Lankan Navy , Sri Lankan Navy rescues 6 Rameswaram fishermen: Various parties appreciate the humanitarian action
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!