சென்னையில் ஏ.சி. வெடித்து சிதறியதில் புது மாப்பிள்ளை மரணம்: படுக்கை அறையில் பற்றி எரிந்த தீயில் சிக்கி உடல் கருகியது...

சென்னை : சென்னை பெரம்பூரில் வீட்டில் பொருத்தப்பட்ட குளிர்சாதனம் வெடித்து சிதறிய விபத்தில் புது மாப்பிள்ளையான பால் வியாபாரி உடல் கருகி உயிரிழந்தார். திருவிக மணவாளன் நகரை சேர்ந்தவர் ஷியாம், இவருக்கும் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆடி மாதம் என்பதால் மனைவி தனலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் வீட்டில்  உள்ள தரைத்தளத்தில் உள்ள படுக்கையறையில் ஷியாம் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்த தந்தை பிரபாகரன் அலறியடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஷியாம் தூங்கிய படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டதும், அங்கு ஷியாம் உடல் கருகி சடலமாக கிடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் ஷியாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: