துப்பாக்கி தூக்குபவர்களுக்கு துப்பாக்கியால் தான் பதில் தர வேண்டும் :ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!!

திருவனந்தபுரம் : துப்பாக்கியை பயன்படுத்துவோரை துப்பாக்கியால் தான் கையாள வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் கொடுத்தே ஆக வேண்டும்.நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசும் யாருடனும் பேச்சுவார்தையே இல்லை.ஆயுதக் குழுக்களுடன் கடந்த 8 ஆண்டுகளில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

துப்பாக்கி தூக்குபவர்களுக்கு துப்பாக்கியால் தான் பதில் தர வேண்டும். சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.மும்பை தாக்குதலுக்கு அப்போதைய இந்திய பிரதமர் பாகிஸ்தானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இருநாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறி இந்தியா - பாகிஸ்தான் கையெழுத்திட்டது. பாகிஸ்தான் நட்பு நாடா?. அல்லது எதிரி நாடா என்பதில் தெளிவே இல்லாமல் ஒரு ஒப்பந்தமா ?. வன்முறைகளை அரசு துளியும் பொறுத்துக் கொள்ளாது,என்றார்.

Related Stories: