பாகிஸ்தான் வீரர்களுக்கு செஸ் விளையாட தடை விதிக்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: பாகிஸ்தான் வீரர்களுக்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:

ஒலிம்பியாட் போட்டிக்காக 16 பாகிஸ்தான் மகிழ்ச்சியுடன் தமிழகத்திற்கு வந்து, வீரர்களும் சென்னை மாமல்லபுரத்தில் தங்கினர். இந்நிலையில், திடீரென விழாவை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவித்தது. இந்தியாவை சிறுமைப்படுத்தவே பாகிஸ்தான் அரசு செய்துள்ள இந்த செயல் இது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, பாகிஸ்தான் அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க சர்வதேச செஸ் கூட்டமைப்பு தடை விதிக்க வேண்டும்.

Related Stories: