×

செயற்கைக்கோளுடன் ஆய்வு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த சீன உளவு கப்பலுக்கு அனுமதி: தமிழகம், கேரளா, ஆந்திராவுக்கு எச்சரிக்கை

கொழும்பு: ‘அம்பந்தோட்ட துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளதால், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால்,  மக்கள் போராட்டம் வெடித்ததை அடுத் துகோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே அதிபர், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தனர். கோத்தபய நாட்டை விட்டே ஓடி விட்டார். இலங்கைக்கு ஏற்கனவே கடன் மேல் கடன் கொடுத்து, இங்குள்ள அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இங்கிருந்து, இந்்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற உளவுக்கப்பல் அம்பந்தோட்டாவுக்கு வரும் 11ம் தேதி செல்வதாகவும், 17ம் தேதி வரை அங்கு தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தமிழக, ஆந்திரா, கேரள மாநிலங்களை உஷார்நிலையில் இருக்கும்படி ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் அணு மின்நிலையம் மற்றும் ஆய்வு மையங்களை இக்கப்பல் உளவு பார்ப்பதற்கான அபாயம் உள்ளது.  

இது பற்றி இலங்கை ராணுவம் அளித்துள்ள விளக்கத்தில், ‘மற்ற நாடுகளின் வர்த்தக, ராணுவ கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது போலவே, சீனா கப்பலுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளது.

இந்தியா கண்காணிப்பு
இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று கூறுகையில், ‘இந்தியா தனது பாதுகாப்புக்கும், பொருளாதார நலனுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த சம்பவத்தையும் கவனமாக கண்காணித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது,’ என்று தெரிவித்தார்.



Tags : Sri Lanka ,Tamil Nadu, Kerala, Andhra Pradesh , Survey with satellite, Sri Lankan port, clearance for Chinese spy ship,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...