பைடனுக்கு 3ம் முறையாக கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடனுக்கு பல மாதங்களுக்கு முன் முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் 2 டோஸ் தடுப்பூசி, 2 பூஸ்டர் தடுப்பூசியை போட்டுள்ளார். அப்படி இருந்தும் கடந்த வாரம் அவருக்கு 2வது முறையாக தொற்று உறுதியானது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு  தொற்று குணமானதாக தெரிந்தது. அதன் பின், வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  இருப்பினும், பைடனுக்கு தற்போது 79 வயதாகிறது என்பதால், அவருடைய உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு 3வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

Related Stories: