×

ஆண்கள் டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியா தகுதி

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் வங்கதேசத்துடன் நேற்று மோதிய இந்தியா 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் - சத்தியன் ஞானசேகரன் இணை 11-8, 11-6, 11-2 என்ற நேர் செட்களில் வங்கதேசத்தின் ராம்ஹிமிலியன் பாம் - அகமது ரிடாய் ஜோடியை வீழ்த்தியது.

அடுத்து நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் நட்சத்திர வீரர் அசந்தா சரத் கமல் 11-4, 11-7, 11-2 என்ற நேர் செட்களில் முகமது ரிபாத் சிப்பரையும், சத்தியன் ஜானசேகரன் 11-2, 11-3, 11-5 என்ற நேட் செட்களிலும் எளிதாக வென்றனர். முன்னதாக லீக் சுற்றில் பார்படாஸ், சிங்கப்பூர், வடக்கு அயர்லாந்து அணிகளையும் இந்தியா 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.


Tags : India , Men's Table Tennis, Semi-Finals, India Qual
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!