பிரேகு ஓபன் டென்னிஸ் பவுஸ்கோவா சாம்பியன்

பிரேகு: செக் குடியரசில் நடந்த பிரேகு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உள்ளூர் நட்சத்திரம் மேரி பவுஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அனஸ்டேசியா போடபோவாவுடன் (21 வயது, 59வது ரேங்க்) நேற்று மோதிய பவுஸ்கோவா (24 வயது, 66வது ரேங்க்) 6-0, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். கரோலினா பிளிஸ்கோவா (2015), லூசி சபரோவா (2016), பெத்ரா குவித்தோவா (2018), பார்போரா கிரெஜ்சிகோவா (2021) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த தொடரில் பட்டம் வென்ற 5வது செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமை பவுஸ்கோவாவுக்கு கிடைத்துள்ளது.

Related Stories: