இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று 2வது டி20ல் மோதல்

செயின்ட் கிட்ஸ்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, பாஸெட்டர் வார்னர் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. டிரினிடாடில் நடந்த முதல் டி20ல் இந்தியா 68 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி செயின்ட் கிட்சில் இன்று நடக்கிறது. முன்னிலையை அதிகரிக்க இந்தியாவும், பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீசும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: