சொந்த தொகுதியில் சூனியம் குழியில் விழுந்த பாஜ. எம்எல்ஏ

நொய்டா:  சைக்கிள் பயிற்சி சென்றபோது சாலையில் இருந்த குழியில் விழுந்த பாஜ எம்எல்ஏ திரேந்திர சிங்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜெவார் தொகுதியில் வெற்றி பெற்று 2வது முறை எம்எல்ஏ.வாகி இருப்பவர் திரேந்திர சிங். உடற்பயிற்சி பிரியரான இவர் தனது தொகுதியில் சைக்கிள் பயிற்சி செய்வார். அப்போது, மக்களை சந்தித்தும் குறைகளையும் கேட்பார்.

தனது தொகுதியில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதலில் இவர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் வழக்கம் போல் தொகுதிக்கு நேற்று சைக்கிளில் சென்ற போது, மழை பெய்து சாலையில் நீர் தேங்கி இருந்ததால், பள்ளம் இருந்ததை கவனிக்காமல் சென்றார். இதில் தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Related Stories: