செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு பாலாற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி: கோயிலுக்கு சென்று திரும்பும்போது சோகம்

சென்னை: சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (44). இவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் நிகழ்ச்சிக்கு  வேனில் சென்றார். பின்னர், அனைவரும் நேற்று மதியம் 12 மணியளவில் சென்னைக்கு வேனில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அருகே பாலாற்று பகுதியில் வேனை நிறுத்திவிட்டு, 10க்கும் மேற்பட்டோர் குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கிய சீனிவாசன் (44), வேதஸ்ரீ (10), சிவசங்கரி (15) ஆகிய 3 பேரும் சேற்றுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக பலியாகினர். இதில், வேதஸ்ரீயின் சடலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டனர். மற்ற இருவரின் சடலங்களை தீயணைப்பு படையினரும் போலீசாரும் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: