திமுகவுடனான கூட்டணி கொள்கை ரீதியானது: இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு

சென்னை: திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியிலானது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். தென்சென்னை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு சைதாபேட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமை வகித்தார்.இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்டு 6,7,8,9, தேதிகளில் திருப்பூரில் நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்க நாளான ஆகஸ்ட் 6.ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நாட்டின் பிரதமர் செஸ் போட்டியை தொடங்கிவைத்த காரணத்தால் திமுகவுக்கும் பாஜவுக்கும் அரசியல் உறவு ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வி தேவையற்ற கேள்வி. திமுக கூட்டணி தொடரும் இது தேர்தல் கூட்டணி இல்லை; இது கொள்கை கூட்டணி தேர்தலுக்காக தொகுதி உடன்பாட்டிற்காக உருவான கூட்டணி இல்லை. மக்களுடைய பிரச்னைகளுக்காக, மக்கள் நலனுக்காக, மக்கள் உரிமைக்காக’ மாநில நலனுக்காக. மதசார்பின்மையை காப்பதற்காக, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: