×

திருமாவளவன் குற்றச்சாட்டு 8 ஆண்டு கால பாஜ ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சரிவு

சாத்தான்குளம்: பாஜவின் 8 ஆண்டு ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது என சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சாத்தான்குளத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய பாஜ அரசின் 8 ஆண்டு ஆட்சியை போன்று இதுவரை இந்திய தேசம் சந்தித்ததில்லை. இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சரிந்து இருக்கிறது. மக்களிடையே இருந்த நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. சாதி அடிப்படையில், மத அடிப்படையில் மக்கள் பிரிந்து இருக்கின்றனர். மோடி தலைமையிலான இந்த 8 ஆண்டு ஆட்சி அதானி, அம்பானி ஆகியோரது நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சி. உழைக்கின்ற மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thirumavalavan , Thirumavalavan accuses India's economy of collapsing during the 8-year rule of the BJP
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு