அமமுக ஆலோசனை கூட்டத்துக்காக தேனி வந்த டிடிவி.தினகரனுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சந்திப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று காலை வந்தார். இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து தேனி செல்வதாக இருந்தது. அவரை வரவேற்க ஓபிஎஸ் ஆதரவாளரும், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவருமான சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் மதுரை சென்று கொண்டிருந்தனர். ஆண்டிபட்டி கணவாய் பகுதியில், எதிரே வந்த டிடிவி.தினகரனும், சையதுகானும் சந்தித்துக் கொண்டனர். அப்போது டிடிவி.தினகரனுக்கு சையது கான் சால்வை அணிவித்து வரவேற்றார். இருவரும் 5 நிமிடம் பேசிக் கொண்டனர். சையதுகான், டிடிவி.தினகரன் சந்திப்பு திட்டமிட்டே நடந்ததாகவும், ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக உத்தரவு பிறப்பித்து சையதுகான் மூலமாக கட்சியில் ஒரு பரபரப்பு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மாவட்ட அதிமுகவினர் ெதரிவிக்கின்றனர்.

Related Stories: