காமன்வெல்த் டி20 மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

பிர்மிங்காம்: இங்கிலாந்து பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. மழையின் காரணமாக போட்டியில் 2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.   

இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய இந்திய அணி 11.4 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில்  ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அசத்தினார்.

Related Stories: