காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு 2-வது தங்க பதக்கம்.! பளுதூக்குதலில் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்

பர்மிங்காம்: 19 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் 19 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மிசோரமைச் சேர்ந்த இவர், 300 கிலோ (140 கிலோ + 160 கிலோ) எடையை வெற்றிகரமாக தூக்கி பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.

Related Stories: