×

அய்யலூரில் புறக்காவல் நிலையத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வடமதுரை: அய்யலூரில் உள்ள பூட்டிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரை மற்றும் அய்யலூரைச் சுற்றி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் அய்யலூருக்கு வந்து செல்கின்றனர். இதனால், நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், தற்போது போலீசார் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அது பயனின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மேலும், விஷஜந்துகள் புகும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே, புறக்காவல் நிலையத்தை திறந்து போலீசாரை நியமிக்க வேண்டும். கூட்ட நெரிசலின்போது குற்றச்சம்பவங்களை தடுக்க உதவும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aiyalur , Public demand to open outpost in Ayyalur
× RELATED கோயில் திருவிழாக்களால் அய்யலூரில்...