சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து சென்னை போலீஸ் விளக்கம் கேட்டுள்ளது . மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு புகார் குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கடந்த 24-ம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவர் சைக்கிளில் சென்ற போது மர்ம நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது குறித்து சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஐஐடிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: