காமன்வெல்த் போட்டியில் பதக்கம்: வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றுள்ள வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பிர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது. வலுதூக்கும் வீரர்கள் தங்களது அபார முயற்சிகளால் பதக்கப் பட்டியலில் இந்தியாவைத் தூக்கி நிறுத்தியுள்ளனர்.

தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி வென்ற பிந்தியாராணி தேவி, சங்கேத் சர்கர் மற்றும் வெண்கலம் வென்ற குருராஜா ஆகியோருக்கு எனது பாராட்டுகள். காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டுள்ள இந்திய அணியினர் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.

Related Stories: