×

மீராபாய் சானு தங்கம் வென்றது இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்துகிறது: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பர்மிங்காம்: 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 2வதுநாளான நேற்று இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்தை அள்ளியது. பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு.

காமல்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும். 2014 ம் ஆண்டில் வெள்ளி, 2018ல் தங்கம், 2022 ல் தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற மீராபாய் சானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்மு, டுவிட்டரில், \”மீராபாய் சானு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்ததன் மூலம் வரலாற்றை எழுதியுள்ளார்.

நடப்பு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக அவர் வென்ற முதல் தங்கப் பதக்கம், நாடு முழுவதும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட அலைகளை உருவாக்கி உள்ளது. மீராபாய்! உங்களையும் உங்கள் பதக்கங்களையும் நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது, என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தனதுடுவிட்டர் பதிவில், மீராபாய் சானு தங்கம் வென்றது இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்துகிறது, பர்மிங்காம் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று புதிய காமன்வெல்த் சாதனையை படைத்ததில் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவரது வெற்றி பல இந்தியர்களை, குறிப்பாக வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது என பதிவிட்டுள்ளார். இதேபோல் ஆடவருக்கான 55 கிலோ எடை பிரிவில் வெற்றி வென்ற சங்கெத் மகாதேவ் சர்க்கார் , 61 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற குருராஜ் புஜாரிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Mirabai Chanu ,India ,President ,PM , Mirabai Chanu's gold win makes India proud again: President, PM congratulate
× RELATED இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை...