×

நீடாமங்கலம் அருகே பாதுகாப்பு இல்லாத பாமணியாற்றின் நடைபாலம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே கீழ கடம்பூரிலிருந்து பாமணியாற்றில் ஒரத்தூருக்கு செல்லும் கம்பியில்லா பாலத்தை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் கீழகடப்பூர் என்ற இடத்திலிருந்து பாமணியாற்றில் தஞ்சை சாலை ஒரத்தூர் பகுதிக்கு இணைப்பு பாலமாக கம்பி பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக அப்பகுதியில் உள்ள பரப்பனாமேடு, வீரவநல்லூர், மேலகடம்பூர் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் இந்த கம்பி பாலம் வழியாகதான் நீடாமங்கலம் கடை வீதிக்கு சென்று வருகின்றனர்.

சிலர் சுற்றி பாமனியாற்று காங்கிரீட் பாலம் வழியாக சென்று வருகின்றனர். இந்திலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாலத்தில் கைபிடி கம்பிகள் இல்லாமல் உள்ளது. இந்த பாலத்தில் சைக்கிளை தள்ளி செல்பவர்கள் பாமனியாற்றில் விழுந்துள்ளனர். இரவு நேரங்களில் பாலத்தில் செல்பவர்கள் கம்பியில்லாத பாலத்தில் தவறி விழுந்தால் ஆற்றில் செல்லும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவார்கள். இந்த பகுதியில் உள்ள மக்கள் எப்ப என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் இரவு நேரங்களில் சென்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Needamangalam ,Pamiyadrat ,Nidamangalam , Bamaniyar footbridge with no protection near Needamangalam; Public demand for repairs
× RELATED நீடாமங்கலம் பகுதியில் களையை கட்டுப்படுத்த கோனோவீடர் கருவி