×

TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு; நாளை முதல் அமல்.! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான செயலி வருகைப்பதிவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன. தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TNSED ,Amal , Attendance registration of students and teachers only in TNSED app; Effective from tomorrow! School Education Department Ordinance
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...