திருப்பதி தரிசனம் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 4 நாட்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் வரும் 2ம் தேதி(நாளை மறுதினம்) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதம் 7,8,9, மற்றும் 10ம் தேதிக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை வருகிற 2ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் பக்தர்கள் ‘https://tirupatibalaji.ap.gov.in’ என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: