×

கோதாவரியில் அடித்து சென்ற அம்மன் கோயில்

திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், சீதாநகரம் அடுத்த புருஷோத்தப்பட்டினத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் வனதுர்க்கையம்மன் கோயில் உள்ளது. இது, 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தெலுங்கில் சிராவண மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் காலை திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் கரையில் அரிப்பு ஏற்பட்டு, கோயில் அஸ்திவாரம் சாய்ந்தது. மாலையில் கோயில் முழுவதும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்து பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். கோயில் ஆற்றில் விழும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Godavari , Godavari's broken goddess temple
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...