×

டிஎன்பிஎல் பைனல் சேப்பாக் - கோவை இன்று பலப்பரீட்சை

கோவை: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் -  கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் 6வது சீசன் இன்றுடன் முடிகிறது. நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை நகரங்களில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் நெல்லை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்தன. நெல்லை, மதுரை பிளே ஆப் சுற்றுடன் வெளியேற, நடப்பு சாம்பியன் சேப்பாக் 5 முறையாக பைனலுக்கு முன்னேறியது. கோவை முதல் முறையாக  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோவையில் இன்று நடைபெறும் பைனலில்  சேப்பாக் - கோவை மோதுகின்றன. இரு அணிகளும் மோதிய கடைசி 5 ஆட்டங்களில்  சேப்பாக் 4-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நடப்பு தொடரில் மோதிய ஆட்டத்திலும் சேப்பாக் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இரு அணிகளுமே சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குவதால், இன்றைய பைனலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Tags : TNBL , TNBL Final Chepauk - Coimbatore Multiple Exam today
× RELATED டிஎன்பிஎல் முதல் தகுதிச்சுற்று கோவை – திண்டுக்கல் பலப்பரீட்சை