×

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து

காமன்வெல்த் மகளிர் டி20ல் நேற்று நியூசிலாந்து - தென் ஆப்ரிக்கா மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச, நியூசி. 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷோபி டிவைன் 48 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), சூசி பேட்ஸ் ஆட்டமிழக்காமல்  91 ரன் (64 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), அமெலியா கெர் 20 ரன் (16பந்து, 3பவுண்டரி) விளாசினர். அடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா  20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் மட்டுமே எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தென் ஆப்ரிக்க அணியின் க்ளோ டிரையன் 39 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் சுனே லுவஸ் 32 ரன் (18 பந்து, 5 பவுண்டரி), வுல்வார்ட் 28, டு பிரீஸ் 26 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பி  பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்த நியூசி., அடுத்து ஆக.2ல் இலங்கையை எதிர்கொள்கிறது.

Tags : New Zealand ,South Africa , New Zealand defeated South Africa
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...