×

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2022

* ஜோஷ்னா முன்னேற்றம்
காமன்வெல்த் மகளிர் ஸ்குவாஷ் போட்டியின் முதல் சுற்றில் பார்படோஸ் வீராங்கனை மேகான் பெஸ்ட் உடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் ஜோஷ்னா சின்னப்பா 3-0 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சாரா குருவில்லா 0-3 என்ற கணக்கில் மலேசியாவின் அய்பா அஸ்மானிடம் தோல்வியைத் தழுவினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 3-0 என்ற நேர் செட்களில் இலங்கையின் ஷமில் வாகீலை வீழ்த்தி பதக்க வாய்ப்பை தக்கவைத்தார்.

இந்தியா இன்று...
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று கிரிக்கெட், ஹாக்கி, டேபிள் டென்னிஸ் மற்றும் பளுதூக்குதலில் பங்கேற்கிறது.
* மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது.
* ஆண்கள் ஹாக்கியில் இந்தியா - கானா அணிகள் மோதும் போட்டியும் பிற்பகல் 3.30க்கு தொடங்கி நடைபெற உள்ளது.
* ஆண்கள் டேபிள் டென்னிஸ் காலிறுதி ஆட்டம் மற்றும் மகளிர் டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டங்கள் பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்க உள்ளன.
* பளுதூக்குதல் மகளிர் 59 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் பிந்தியாராணி தேவி களமிறங்குகிறார்.
* ஆண்கள் பளுதூக்குதல் 67 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஜெரிமி லால்ரின்னுங்கா மற்றும் 73 கிலோ எடை பிரிவில் அசிந்தா ஷெவுலி பங்கேற்கின்றனர்.

Tags : Commonwealth Games Festival , காமன்வெல்த் விளையாட்டு, திருவிழா 2022 Commonwealth Games Festival 2022
× RELATED காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2022