×

கொடைக்கானலில் தூண்பாறையை மறைக்க சுவர் அமைக்கப்படவில்லை: மாவட்ட வனஅலுவலர் விளக்கம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள்,  குணா குகை, தூண்பாறை ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. தூண் பாறை பகுதியில் பல அடி உயர சுவரைக் கட்டி வருகின்றனர். இந்த சுவர் தூண்பாறையை மறைக்கும் வகையில் உள்ளது என சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கொடைக்கானல் வனகோட்ட மாவட்ட வனஅலுவலர் டாக்டர் திலீப்பிடம் கேட்டபோது, ‘‘இந்த சுவர்  முப்பரிமாண யானைகள் ஓவியம் வரைவதற்காக கட்டப்பட்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள், இந்த ஓவியங்கள் முன்பு செல்பி எடுப்பதற்கு ஏற்ற வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட உள்ளது. தூண் பாறையை மறைக்கும் நோக்கம் இல்லை என்றார்.


Tags : Kodaikanal ,District Forest Officer , No wall erected to cover pillar rock at Kodaikanal: District Forest Officer explanation
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்