×

இனி 7 நாளும் சென்னை - லண்டனுக்கு நேரடி விமானம்

சென்னை: லண்டன்-சென்னை-லண்டன் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணிகள் கூட்டம் பெருமளவு அதிகரிப்பு காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து வாரத்தில் 7 நாட்களும் இயங்கக்கூடிய, தினசரி விமானமாக மாற்றப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள்  விமானம், கொரோனா பாதிப்பிற்கு பின்பு இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. சென்னையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால் இந்த விமானத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். டிக்கெட் கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று, பயணிகள் தரப்பில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதை ஏற்று, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நாளை (திங்கட்கிழமை) முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் இந்த விமானம், அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்து சேரும். அதே விமானம் மீண்டும் சென்னையிலிருந்து  அதிகாலை 5.31 மணிக்கு புறப்பட்டு, லண்டனின் விமான நிலையத்திற்கு செல்லும். இந்த விமானத்தின் பயண நேரம் சுமார் 13 மணி நேரம்.

Tags : Chennai ,London , Direct flight to Chennai - London in 7 days
× RELATED சென்னையில் விமானம் தாமதம் காரணமாக லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் தவிப்பு