×

திரிசூலம் சிவசக்தி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம், சிவசக்தி நகரில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 80 ஏக்கர் 73 சென்ட் நிலம் உள்ளது. இதை ஆக்கிரமித்து ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வந்தனர். அதற்காக குடியிருப்புவாசிகள் வரி மற்றும் வாடகை செலுத்தாததால், அறநிலையத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டு, மீண்டும் கோயில் இடமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அங்குள்ள 54 வீடுகளை உடனடியாக காலி செய்யவும், அந்த இடத்தை மீட்டு மீண்டும் இந்து அறநிலையத்துறைக்கே வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், கடந்த மாதம் வருவாய் துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இணைந்து முதற்கட்டமாக 16 வீடுகளுக்கு சீல் வைத்து சென்றனர். இந்நிலையில், மீதமுள்ள வீடுகளுக்கு சீல் வைப்பதற்காக நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையாளர் லெட்சுமிகாந்தன் பாரதிதாசன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் வருவாய் துறையினர் மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்து, 15 வீடுகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : Trishulam ,Shivashakti Nagar ,Charity Department , Sealing of Occupying Houses in Trishulam Shivashakti Nagar: Charity Department Officials Action
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...