பிரியாணி கடையில் மதுபாட்டில் விற்றவர் கைது

பெரம்பூர்: பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பிரியாணி கடையில் இரவு நேரங்களில் மதுபானம் விற்கப்படுவதாக பெரவள் ளூர் போலீசருக்கு ரக சிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேற்கண்ட கடையில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது, அந்த கடையில் 18 குவாட்டர் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கொளத்தூர் ஹரிதாஸ் தெருவை சேர்ந்த சரவணன் (34) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி, இரவில் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: