திமுக 15வது பொது தேர்தல் சென்னை மாவட்ட வட்டங்கள் விவரம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டங்களில் உள்ள வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான விவரங்களை துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் நடந்த மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட வாரியாக அனைத்து பதவிகளும் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் வட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களில் பகுதி கழக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் வட்டங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: