மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

சென்னை: வடபழனி மின்வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘உதவி பொறியாளர் / இயக்குதலும் மற்றும் பராமரிப்பு அழகிரி நகர் பிரிவு அலுவலகம், எண்.1 சுப்ரமணியம் தெரு நெற்குன்றம் பாதை, வடபழனியில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் 1.8.2022 முதல் புதிதாக துவக்கப்பட்ட 33/11 கி.வோ. ஜி.ஐ.எஸ் துணை மின் நிலையம், எண்.47, சிவன் கோயில் தெரு, இரண்டாம் தளம், கோடம்பாக்கம் என்ற முகவரியில் இயங்கும்.  மேலும் இதே முகவரியில் 1.8.2022 முதல் அழகிரி நகர் பிரிவு மின் கட்டண வசூல் மையமும் செயல்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: